பேரன், பேத்தி கேட்கும் கேள்விக்கு என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.. எதியூரப்பா

Posted by:
Published: Friday, August 3, 2012, 10:34 [IST]

Yeddyurappa
பெங்களூர்: இன்றுள்ள சிறுவர்கள் பிரகாசமாக இருக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக இருக்கிறார்கள்.என் பேரன், பேத்தி கேட்கும் கேள்விக்கே என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே அவர்களுக்கேற்ற திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் கல்வித்துறை தொடர்பாக நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு எதியூரப்பா பேசுகையில், தற்போது ஆரம்பக் கல்வி அளவில் அரசுப் பள்ளிகளில் உள்ள கல்வியின் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது. இதனால்தான் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை பெற்றோர்கள் அனுப்பி வருகின்றனர்.

தற்போது உள்ள குழந்தைகள் ஐக்யூ அளவில் மிகப் பிரமாதமாக உள்ளனர். எனவே சாதாரண முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களால் இவர்களை சமாளிக்க முடியாது. நல்ல தரமான, திறமையான, குழந்தைகளின் அறிவுப் பசிக்குத் தீனி போடக் கூடியவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

இன்றுள்ள குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு எனது பேரப் பிள்ளைகள்தான் சரியான அளவுகோல். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதிலே அளிக்க முடியவில்லை. திணறிப் போய் விடுவேன்.

Story first published: Friday, August 03, 2012, 10:34 [IST]
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS