தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Posted by:
Published: Friday, July 20, 2012, 12:27 [IST]

Vijayakanth
சென்னை: ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாம் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஜயகாந்த். இவரது வெற்றியை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்ட மூர்த்தி என்பவரின் மனைவி ஜெயந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தாம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை முறையான காரணமின்றி அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். தமது வேட்புமனு தள்ளுபடியானதால்தான் விஜயகாந்த் வெற்றி பெற்றி பெற்றிருக்கிறார். இதனால் விஜயகாந்த் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஜெயந்தி கூறியிருந்தார்.

ஆனால் ஜெயந்தி தாக்கல் செய்த மனுவில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதால் அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தற்போது விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, July 20, 2012, 12:27 [IST]
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS