எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பேரிடி விழும்: ஈரான் எச்சரிக்கை

Posted by:
Published: Sunday, June 3, 2012, 16:10 [IST]

Mahmoud Ahmadinejad'
டெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இஸ்ரேல் மீது பேரிடிதான் விழும் என்று அந்நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா கொமேனி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் அவர் கூறியதாவது:

எங்கள் மீது ஈரான் ஏதாவது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பேரிடி விழுவது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும்

ஈரான் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று ஒரு பொய்யை வைத்துக் கொண்டு எங்களை சர்வதேச சமூகம் சந்தேகிக்கிறது. எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைதான் எங்களது மனத் துணிவை பலப்படுத்தியிருக்கிறது.

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்த அடையாளமோ, ஆதாரமோ இல்லாததால், ஈரானுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக எங்கள் பரம எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் எங்களை அவமதித்து வருகின்றன.

ஈரான் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பேரிடியாக விழும். சர்வதேச அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், ஈரானை ஒரு ஆபத்தான நாடாகவும் சித்தரித்து வருகின்றன. இது ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய பொய்யான தகவல்களால் அவர்கள் ஈரானுக்கு துரோகம் செய்கின்றனர் என்றார் அவர்.

Story first published: Sunday, June 03, 2012, 16:10 [IST]
உடனுக்குடன் செய்திகளை படிக்க Oneindia Tamil App டவுன்லோட் செய்க Android IOS